திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்க இம்ரான் எம்.பி கோரிக்கை - FLASH NEWS - TAMIL

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்க இம்ரான் எம்.பி கோரிக்கை



இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை - கொழும்பு பகல்நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப்போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  

அமைச்சரை நேரில் சந்தித்து மகஜரைக் கையளித்து இது தொடர்பாக தெளிவு படுத்திய இம்ரான் எம்.பி குறிப்பிட்டுள்ளதாவது. 

கடந்த சில வருடங்களாக பகல் 11.00 மணிக்கு திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு புறப்பட்டு வந்த கடுகதி ரயில் சேவை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இச்சேவையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் பெருங் கவலையடைந்துள்ளனர். 

தமது உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்லும் ஏழை விவசாயிகளும், கொழும்புக்கு வைத்திய சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும் இந்த ரயில் சேவையை அதிகமாகப் பயன்படுத்தி வந்தனர். இதனைவிட திருகோணமலைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளும் அதிகளவில் இந்த ரயில் சேவையைப் பயன் படுத்தி வந்தனர். 

தற்போது இந்த சேவை திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும், உல்லாசப் பிரயாணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, இந்த ரயில் சேவையை மீள ஆரம்பிக்க வேண்டுமென இம்ரான் எம்.பி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இவற்றை செவிமடுத்த அமைச்சர் விரைவில் இத குறித்த நல்ல தீர்மானம் ஒன்றுக்கு வருவதாக வாக்குறுதி அளித்தார்.

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்