இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு, எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லையாம்.. - FLASH NEWS - TAMIL

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு, எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லையாம்..


இலங்கை அரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கடந்த டிசம்பர் மாதம் முதல் 2447 இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாய வேலைகளுக்காக இஸ்ரேல் சென்றுள்ளனர்.

இதேவேளை, விவசாய கைத்தொழில் துறையில் வேலைகளுக்கு தகுதி பெற்ற மேலும் 61 இலங்கையர்களுக்கு விமான பற்றுச்சீட்டு வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழு இஸ்ரேலிய விவசாய தொழில்துறை தொழிலாளர்களின் 53 மற்றும் 54 வது தொகுதி ஆகும்.

அவர்களில் 13 பேர் இம்மாதம் 30 ஆம் திகதி இஸ்ரேலுக்கு புறப்படுவார்கள், மீதமுள்ளவர்கள் நவம்பர் 6 மற்றும் 16 ஆம் திகதிகளில் புறப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்தோடு, இந்த நாட்களில் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லை என இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்