ரமழான் மாத தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று. - FLASH NEWS - TAMIL

ரமழான் மாத தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று.


ஹிஜ்ரி 1445 புனித ரமழான் மாதத்தின் தலைப் பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு இன்று திங்கள் கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் மாநாட்டு மண்டபத்தில் கூட இருப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

மேற்படி பிறை பார்க்கும் மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரசீன் உள்ளிட்ட பள்ளிவாசலின் நிர்வாகிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர் மற்றும் ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதி நிதிகள், மேமன் சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தொடர்புகளுக்கு – 0112432110 0112451245 0777353799. 

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்