CEB ஊழியர்களின் பதவி விலகலை தயக்கமின்றி ஏற்கவும் - FLASH NEWS - TAMIL

CEB ஊழியர்களின் பதவி விலகலை தயக்கமின்றி ஏற்கவும்


மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் எந்தவொரு தனிநபரின் பதவி விலகலையும் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளுமாறும், இலங்கை மின்சார சபைக்கான அனைத்து நிலுவைத் தொகைகளையும் வசூலிக்குமாறும் மின்சார சபைக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மின்சார சபை சீர்திருத்தங்கள், செலவுக் குறைப்பு பொறிமுறைகள், உற்பத்தித் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மின் திட்டங்களை செயல்படுத்துதல், டிஜிட்டல் கட்டண தளம் மற்றும் அவுட்சோர்சிங் கட்டண வசூல் மற்றும் மின்சார சபை சேவைகளுக்கு இடையூறு விளைவித்த தனிநபர்களுக்கு எதிராக சட்ட ஒழுங்கை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்