மத்திய வங்கி ஆளுநருக்கு காட்டமாக பதில் கொடுத்த ரணில் - FLASH NEWS - TAMIL

மத்திய வங்கி ஆளுநருக்கு காட்டமாக பதில் கொடுத்த ரணில்

 


“நாங்கள் இந்த சர்வகட்சி மாநாட்டுக்கு வந்திருப்பது கேவலமான அரசியல் பேசுவதற்கு அல்ல ” என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு மிகவும் கடும் தொனியில் பதில் அளித்தார். ஜனாதிபதி தலைமையில் இன்று கூடிய சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்ட கட்சி தலைவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அதற்கு முன்னதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால், பொருளாதார நிலைமை தொடர்பில் நீண்டதொரு விளக்கம் ஒன்றை முன் வைத்தார். அதனை தொடர்ந்து ஆவேசத்துடன் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, ” நாங்கள் இங்கு வந்திருப்பது கேவலமான அரசியல் செய்ய அல்ல.இன்றை ய நெருக்கடி நிலைக்கு நல்லாட்சி அரசாங்க காலத்தில் பெற்ற கடன் சுமையே காரணமாகும். ”
என கப்ரால் தெரிவித்த கருத்தை ரணில் விக்கி ரமசிங்க கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார். கப்ராலுக்கு பதில் கொடுத்தால் மாநாடு திசை திருப்பப்படும். இந்த பொருளாதார நெருக்கடிக்கு நாங்கள் தான் காரணம் என கூறுவது பிழையான கருத்தாகும். இங்கு கருத்து தெரிவித்த கப்ரால் மேலும் கூறியதாவது; 2015 இல் இருந்து 2019 வரை நாட்டின் கடன் சுமை அதிகரித்து காணப்படுகின்றது. வெளிநாட்டு கடன் அதிகரித்து உள்ளது. அதே நேரம், உள்நாட்டு கடனும் அதிகரித்துள்ளது.அந்த காலப்பகுதியில் வெளிநாட்டு கடனாக 23 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. இது 38.7 வீத அதிகரிப்பாகும். இதே வேளை,இங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க; ” நாம் இங்கு வந்திருப்பது அரசியல் செய்ய அல்ல. யார் அரசியல் பேசுகிறார்கள்.அதற்கு பதில் சொல்லவும் மத்திய வாங்கி ஆளுநருக்கு பதில் சொல்ல நாம் வரவில்லை. அவர் கேவலமான அரசியல் பேசுகிறார். சுதந்திரக்கட்சி விடுத்த வேண்டுகோளுக்கு அமையத்தான் இந்த மாநாடு கூட்டப்பட் டுள்ளது.பழைய நடப்புகாகவேனும், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா என்னை கேட்டிருந்தார். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க பேசினார்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்